உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நச்சாடைதவிர்த்தருளிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

நச்சாடைதவிர்த்தருளிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

சேத்தூர்: பாண்டியநாட்டு பஞ்ச பூத ஸ்தலங்களிள் ஆகாய ஸ்தலமான தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் 54ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்தது.கடந்த 10தேதிமுதல் கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை பூஜைகள் நடந்தன.நேற்று காலை 9மணிக்கு பரம்பரை அறங்காவலர் துரைராஜசேகர் முன்னிலையில் பிச்சை சிவாச்சார்யார்,கணபதிசுந்தரகுருக்கள்,பாலசுப்பிரமணிய குருக்கள்,சோமசுந்தரபட்டர் தலைமையில் 200மேற்பட்ட சிவாச்சாரியார்கள் மூலஸ்தானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, எம்.எல்.ஏ கோபால்சாமி,வழக்கறிஞர் முருகன்,செல்வசுப்பிரமணியராஜா,நெல்லைகுமார்,தமிழ்வாணன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !