உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூவந்தி அஞ்சூர் முத்தன் கோயிலில் கும்பாபிஷேகம்

பூவந்தி அஞ்சூர் முத்தன் கோயிலில் கும்பாபிஷேகம்

பூவந்தி: பூவந்தி அஞ்சூர் முத்தன் எனும் மேலமந்தக்கருப்பணசாமி கோயிலில், கும்பாபிஷேகம் நடந்தது.12ந்தேதி முதல் கால யாகசாலை பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 2ம் கால பூஜையில் வேதபாராயணம், பூர்ணா ஹூதி, தீபாராதனை பூஜைகள் நடந்தன. நேற்று கடம் புறப்படுதல், ஆலயம் வலம் வருதல் முடிந்து, 11.30 மணிக்கு கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. மந்தக்கருப்பணசாமி, பரிவார தேவதைகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுப்புற கிராமத்தினர் பங்கேற்றனர். கோவிந்த ராஜன் அய்யங்கார் குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். சிவகங்கை, ரயில்வே காலனி கங்காதர விநாயகர் கோயிலில், கணபதி ஹோமத்துடன் ஜூலை 11ல் கும்பாபிஷேக பணிகள் துவங்கின. நேற்று,காலை 5.35 மணிக்கு, நான்காம் கால பூஜையுடன் துவங்கியது. காலை 7 மணிக்கு கடம்புறப்பாடு நடந்தது. தொடர்ந்து காலை 8.25 மணிக்கு, கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபி ஷேகம் நடந்தது. சுவாமிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ரயில்வே ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். நாட்டரசன்கோட்டை , பிரசன்ன வேங்கடாஜலபதி பெருமாள் கோவிலில், கடந்த 11ம் தேதி, வாஸ்து ஹோமத் துடன் கும்பாபிஷேக பணிகள் துவங்கின. தினமும், சுவாமிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.நேற்று காலை 6 மணிக்கு கும்பபூஜையுடன் கும்பாபிஷேக பணிகள் துவங்கின. காலை 8 மணிக்கு, பூர்ணாகுதியுடன், கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தினர். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !