குருஸ்தலம் தென்குடித்திட்டையில் கோலாகல கும்பாபிஷேகம்!
ADDED :4516 days ago
தஞ்சாவூர்: தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் இன்று காலை கும்பாபிஷேகம் கோலகலமாக நடந்தது. தஞ்சாவூரிலிருந்து மெலட்டூர் செல்லும் வழியில் 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. அதன்படி இன்று காலை 9.15 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. மூலவர், ராஜகோபுரம் மற்றும் பரிவார கோபுரங்களுக்கு சரியாக 9.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தை காண தஞ்சாவூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதி மக்கள் திரளாக கூடியிருந்தனர். கடந்த 3 நாட்களாக நடைபெற்ற இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் கோயில் செயல் அலுவலர் கோவிந்தராஜு தலைமையில் நடைபெற்றது. நவக்கிரகத்தில் இத்தலம் குருவுக்குரிய தலமாக விளங்குகிறது.