உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விவேகானந்தர் பிறந்தநாள் அமெரிக்காவில் விழா

விவேகானந்தர் பிறந்தநாள் அமெரிக்காவில் விழா

அமெரிக்காவில், சுவாமி விவேகானந்தர் பயணம் செய்த இடங்களில், அவரது, 150வது பிறந்தநாள் விழாவை கொண்டாட, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின், சிகாகோ நகரில், சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவு, இந்து மதம், வெளிநாடுகளில் பரவ தூண்டுகோலாக அமைந்தது. கடந்த, 1900ம் ஆண்டில், விவேகானந்தர், அமெரிக்காவில் உள்ள ஆக்லாந்து, சான்பிரான்சிஸ்கோ, அலமாடி உள்ளிட்ட நகரங்களில் பயணம் மேற்கொண்டார். அவரது, 150வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, இந்த நகரங்களில் விழா நடத்த,  "இந்து ஸ்வயம்சேவக்  சங்கம் திட்டமிட்டுள்ளது. ஊர்வலங்கள், சொற்பொழிவுகள் போன்றவை, இவ்விழாவையொட்டி நடைபெற உள்ளன. 100 இளைஞர்கள் இவ்விழா ஏற்பாடுகளில் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !