பெருமாள் கோவிலில் மகா சுதர்சன ஹோமம்
பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வார் ஜெயந்தியையொட்டி, மகா சுதர்சன ஹோமம் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு சக்கரத்தாழ்வார் மூலவர் அபிஷேகம், 8:30 மணிக்கு ஹோமம் ஆரம்ப பூஜைகளும் நடைபெற்றன. புருசசூக்தம், ஸ்ரீசுக்தம், தன்வந்த்ரி, காயத்திரி, அஷ்டலட்சுமி, மகாலட்சுமி, சுதர்சன ஹோமமும், காலை 11:30 மணிக்கு உற்சவ மூர்த்தி சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகமும் இடம்பெற்றன.தலைமை அர்ச்சகர் வேணுகோபால் தலைமையில், உதவி அர்ச்சகர் பார்த்தசாரதி, விஜயன் ஆகியோர் ஹோமத்தை நடத்தினர். தொடர்ந்து, உற்சவர் சக்கரத்தாழ்வாருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்; பிரசாதம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் தக்கார் அனிதா, செயல் அலுவலர் வெண்மணி செய்திருந்தனர்.பருவமழையால் வளர்ச்சிப்பணி பாதிப்புவால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் வார்டுகளில் வளர்ச்சிப்பணிகள் செய்ய கடந்த மாதம் டெண்டர் விடப்பட்டது. ஆனால் தென்மேற்குப்பருவ மழை தீவிரமாக பெய்துவருவதால், கட்டுமானப்பணிகள் செய்ய முடியாமல் ஒப்பந்ததாரர்கள் அவதிப்பட்டுவருகின்றனர். மேலும் மழையினால் கட்டுமானத்தொழிலாளர்கள் வே இல்லாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து நகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் பொன்கணேஷ் கூறும் போது,""நகராட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துதர முதல் கட்டமாக ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டுள் ளது. மழை பெய்து வருவதால் இந்தப்பணி உடனடியாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழைப்பொழிவு குறைந்த பின்னர் வார்டுகளில் வளர்ச்சிப்பணி வழக்கம் போல் நடைபெறும், என்றார்.