கும்பாபிஷேகம் !
ADDED :4482 days ago
சோழவந்தான் : கீழ்நாச்சிக்குளம் கருப்பணசுவாமி வரதவிநாயகர், காளியப்பன், பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வரதராஜபண்டிட் முன்னிலையில் நடந்தது. சோழவந்தான் ஐயப்பன் கோயிலில் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு யானைமீது பதஞ்சலி சுப்பிரமணியம் புனிதநீர் குடத்துடன் வர, நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் புனிதநீர் குடங்களுடன் ஊர்வலமாக கோயில் வந்தனர். காலை 10.30 மணிக்கு திருப்பணிக்குழுவினர் கருவீரபத்திரன், ஏ.எம்.சுப்பிரமணியம், சேகரன், வைரமணி பக்தர்கள் புனிநீர் குடங்களை சுமந்து கோயில் வந்தனர். அங்கு மணிகண்டசிவாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.