எப்போதும் இறைநாமத்தை ஜெபித்து வந்தால் நமக்கு இறையருள் கிடைக்குமா?
ADDED :4570 days ago
உரு ஏறத் திரு ஏறும் என்பர். இடைவிடாது ஜெபித்தால் திருவருள் உண்டாகும் என்பது இதன் பொருள். பக்தியோகத்தில் நாமஜெபம் முக்கியமானது. ரத்னாகரர் என்பவர், ராமநாமத்தை ஜெபித்து வால்மீகியாக மாறினார். சிவனுக்குரிய ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாய, விஷ்ணுவுக்குரிய எட்டெழுத்து மந்திரமான ஓம் நமோ நாராயணாய ஆகியவை மிகவும் சிறப்பானவை. இவற்றை 108, 1008 என்று நித்யஜெபம் செய்வது சிறப்பு.