உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூலநாதர் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு

மூலநாதர் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு

பாகூர்: மூலநாதர் சுவாமி கோவிலில், சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. பாகூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் கோவில் உள்ளது. சனி பிரதோஷ வழிபாடு நேற்று முன்தினம் நடந்தது. அதையொட்டி, காலை சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை 4:30 மணிக்கு நந்தி பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், தேன், பன்னீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்துவிக்கப்பட்டு, தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !