ஆதிகும்பேஸ்வரன் கோவிலில் உழவாரப்பணி
ADDED :4519 days ago
கும்பகோணம்: கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரன் கோவிலில் உழவாரப்பணி நடந்தது. மதுரை ஓம் நமச்சிவாய உழவாரப்பணி இயக்கத்தினை சேர்ந்த 20 பேர் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரன் கோவிலில் உழவாரப்பணியை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கோவிலில் உள்ள பிரகாரங்களில் உள்ள செடிகளை அகற்றினர். மேலும், விளக்கேற்றும் இடங்களையும், பக்தர்களால் திருநீறு கொட்டியுள்ள இடங்களையும் சுத்தம் செய்தனர். பின்னர் சுவாமிகளின் திருவாச்சிகளையும், பிரகாரங்களில் உள்ள சுவாமி சிலைகளை தண்ணீர் விட்டு சுத்தம் செய்தனர்.