வடமதுரை திருவிழாவில் இன்று முத்துப்பல்லக்கு
ADDED :4516 days ago
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில், இன்றிரவு வசந்தம் முத்துப்பல்லக்கு நிகழ்ச்சி நடக்கிறது. ஆடித்திருவிழா கடந்த 14ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரை நடக்கிறது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும், கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் 20ம் தேதியும், தேரோட்டம் நேற்றுமுன்தினமும் நடந்தது. 13 நாள் திருவிழாவில் மிக அதிகளவில் பக்தர்கள் பங்கேற்கும் வசந்தம் முத்துப்பல்லக்கு இன்றிரவு நடக்கிறது. சன்னதியில் இருந்து முத்துபல்லக்கில் புறப்படும் சுவாமி, இரவு முழுவதும் நகரை வலம் வந்து நாளை காலை சன்னதி திரும்புவார். விழா ஏற்பாட்டினை செயல் அலுவலர் வேலுச்சாமி, தக்கார் அறிவழகன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.