கொளஞ்சியப்பர் கோவிலில் சுப்ரமணிய சிவா தின பூஜை
ADDED :4825 days ago
விருத்தாசலம்: கொளஞ்சியப்பர் கோவிலில், சுப்ரமணிய சிவா தின சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் மணவாளநல்லூர் சித்தி விநாயகர் சமேத கொளஞ்சியப்பர் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் சுப்ரமணிய சிவா தின சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். அதையொட்டி, நேற்று காலை விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், மலர், எலுமிச்சை மாலைகள் சாற்றி, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.