பத்தமடை முருகன் கோயிலில் 31ல் ஆடி கிருத்திகை விழா
ADDED :4565 days ago
வீரவநல்லூர்: பத்தமடை வில்வநாதசுவாமி கோயிலில் வெற்றி வேலனாய் அருள்பாலிக்கும் ஆறுமுகப்பெருமானுக்கு வரும் 31ம் தேதி ஆடிக் கிருத்திகை புஷ்பாஞ்சலி விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு அன்று காலை யாகசாலை பூஜை, விசேஷ அபிஷேகங்கள், தீபாராதனை நடக்கிறது. மாலையில் 459 வது திருவிளக்கு வழிபாடும், தொடர்ந்து ஆறுமுக அர்ச்சனையும், பலவண்ண நறுமண மலர்களால் புஷ்பாஞ்சலியும் நடக்கிறது. ஏற்பாடுகளை கார்த்திகை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.