உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் கோவில்களை பாரம்பரிய சின்னமாக்க பரிந்துரை!

ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் கோவில்களை பாரம்பரிய சின்னமாக்க பரிந்துரை!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் கோவில்களை, யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்க, பரிந்துரைக்கப்படும், என, மத்திய அமைச்சர் செல்ஷா குமாரி தெரிவித்தார். ராமேஸ்வரத்தில், அவர் கூறியதாவது: ராமேஸ்வரம் கோவில் மூன்றாம் பிரகாரம், சிற்பம், கட்டட கலை உள்ளிட்டவை பிரமிக்க வைக்கின்றன. தமிழக கோவில்கள், ஆன்மிக வழிபாட்டிற்கு சிறந்ததாக விளங்குகின்றன. ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் கோவில்களை, பாரம்பரிய சின்னமாக அறிவிக்க, யுனெஸ்கோ அமைப்பிற்கு பரிந்துரைக்க, நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய திட்ட குழு கமிஷன் வெளியிடும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர் கணக்கின்படி, மத்திய அரசு, நலத் திட் டங்களை அறிவித்து, மக்கள் பயனடைந்துள்ளனர். இதை, விமர்சனம் செய்வது வருந்ததக்கது. தமிழகத்தில் இருப்பது போல், டில்லி உள்ளிட்ட பிற மாநிலங்களில், ஏழை மக்களுக்கான குறைந்த விலை உணவு திட்டம், செயல்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !