காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள்
ADDED :4486 days ago
கள்ளக்குறிச்சி: நீலமங்கலம் சிவன் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன் உடனுரை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டம தினத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. அபிஷேகங்களுக்கு பின் கால பைரவருக்கு அரளி பூக்கள் மாலை அணிவித்து, 108 வடைமாலை சாற்றப்பட்டது. பெண்கள் தேங்காயில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.