திருப்பரங்குன்றம் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா கோலாகலம்!
ADDED :4521 days ago
முருகனின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று. ஆடி மாதம் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரம். இந்த ஆடிக்கிருத்திகை முன்னிட்டு முருகனுக்குரிய திருத்தலங்களில் எல்லாம் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கும். அறுபடை வீடுகளில் முதல் படையான திருப்பரங்குன்றம் கோயிலில் ஆடிக்கார்த்திகை விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.