உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னியக்கோவிலில் 9ம் தேதி தீமிதி விழா

கன்னியக்கோவிலில் 9ம் தேதி தீமிதி விழா

கிருமாம்பாக்கம் :கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் மன்னாதீஸ்வரர் கோவில் தீமிதி விழா, வரும் 9ம் தேதி நடக்கிறது. கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் மன்னாதீஸ்வரர் கோவில் தீமிதி விழா ஆக 2 கொடியேற்றத்துடன் துவங்கியது. அதையொட்டி விநாயகர், சுப்ரமணியர், வள்ளி தேய்வானை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. முக்கிய விழாவான தீமிதி விழா வரும் 9ம் தேதி நடக்கிறது. அதனை முன்னிட்டு, அன்று காலை 10:00 மணிக்கு சுப்ரமணியர் வள்ளி, தேய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு தீமிதி விழா நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், தனி அதிகாரி மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !