உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஞ்சாஞ்சேரி கோவிலில் ஆடி கிருத்திகை

அஞ்சாஞ்சேரி கோவிலில் ஆடி கிருத்திகை

செஞ்சி : அஞ்சாஞ்சேரி சுப்ரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை விழா நடந்தது. செஞ்சி தாலுகா அஞ்சாஞ்சேரியில் உள்ள வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை உற்சவம் 29ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 31ம் தேதி காலை சக்திவேல் அபிஷேகம் மற்றும் ஊர்வலம் நடந்தது. காலை 9:00 மணிக்கு சுப்ரமணியருக்கு மகா அபிஷேகம், 11 :00 மணிக்கு மஞ்சள் இடித்தல், மிளகாய் பொடி அபிஷேகம், செடல் சுற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. பிற்பகலில் அலகு குத்துதல், தீ மிதி, காவடி ஊர்வலம் மற்றும் தேர்பவனி நடந்தது. மாலை சுவாமி திருக்கல்யாண வைபவமும், சாமி வீதிஉலாவும் நடந்தது. ஆக 1 காப்பு களைதல் மற்றும் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !