மேல்மலையனூருக்கு 1,000 பஸ்கள்
ADDED :4505 days ago
ஆடி அமாவாசையை முன்னிட்டு, மேல்மலையனூருக்கு, தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து, 1,000 சிறப்பு பேருந்துகளை இயக்க, விழுப்புரம் போக்குவரத்து கழகம் திட்டமிட்டு உள்ளது. விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில், மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று, ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். இத்திருவிழாவிற்கு, தமிழகம் உட்பட நாடு முழுவதும், பல பகுதிகளில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். நாளை, ஆடி அமாவாசை தினத்தன்று, அதிகளவில் பக்தர்கள் கூடுவர். இதையொட்டி, அன்றைய தினம், தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து, விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில், ”மார் 1,000 சிறப்பு பஸ்கள் இயக்கபட உள்ளது.