மாரியம்மன் கோவிலில் இன்று கரக உற்சவம்
ADDED :4505 days ago
கும்பகோணம்: ஸ்ரீ ஆதிநந்தவனத்து மாரியம்மன் கோவில் கரக உற்சவம் இன்று நடக்கிறது. கும்பகோணம் பேட்டை வடக்கு தெருவில் உள்ளது ஸ்ரீ ஆதிநந்தவனத்து மாரியம்மன் கோவில். கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத்தில் திங்கட்கிழமை இரவு அம்மன் கரகத்தில் உற்சவம் நடக்கும். அதன்படி வரும் இன்று இரவு கரக உற்சவம் நடக்கிறது. முன்னதாக காலை, 9 மணிக்கு அபிஷேகமும், மதியம், 12 மணிக்கு அலங்கார ஆராதனையும், இரவு, ஒரு மணிக்கு அனைத்து சுவாமி பரிவாரங்களுடன் காவிரி கரைக்கு சென்று, பின் செவ்வாய் அதிகாலை பல்வேறு தெருக்களுக்கு வீதிஉலா சென்று கோவிலை வந்தடையும். விழாவை முன்னிட்டு நாதஸ்வர நிகழ்ச்சி, வாணவேடிக்கை, தமிழர் பண்பாட்டு விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. விழாவுக்கு ஏற்பாடுகளை பேட்டை வடக்கு தெரு பஞ்சாயத்தார் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.