உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழை மாரியம்மன் கோவில்செடல் திருவிழா துவக்கம்

ஏழை மாரியம்மன் கோவில்செடல் திருவிழா துவக்கம்

வில்லியனூர்:வில்லியனூர் தேவி ஏழை மாரியம்மன் கோவில், 85ம் ஆண்டு செடல் திருவிழா நேற்று துவங்கியது.காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 8:30 மணிக்கு கொடியேற்று விழா நடந்தது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு வீதியுலா நடக்கிறது.8ம் தேதி பரிவேட்டை, 9ம் தேதி அரங்கர் அனந்தசயனம், 12ம் தேதி முப்பல்லக்கு விழா நடக்கிறது. 13ம் தேதி செடல் உற்சவம், 14ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, 15ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !