ஆண்டாள் கோவிலில் ஐந்து கருட சேவை
ADDED :4504 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோவிலில், ஐந்தாம் நாள் திருவிழாவை யொட்டி, ஐந்து கருட சேவைகள் நடந்தன. இங்கு ஆடிப்பூர விழா, நடந்து வருகிறது. ஐந்தாம் நாளான நேற்று முன் தினம் காலை, 9:00 மணிக்கு, ஆடிப்பூர மண்டபத்தில், பெரியாழ்வார் எழுந்தருள, பெரிய பெருமாள், சுந்தரராஜன், திருவேங்கடமுடையான், திருத்தங்கல் அப்பன், ஆண்டாள், ரெங்க மன்னாருக்கு, மங்களாசாசனம் நிகழ்ச்சி நடந்தது. இரவு, 11:00 மணிக்கு நடந்த, ஐந்து கருட சேவையில், ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும், ரெங்க மன்னார், பெரிய பெருமாள், சுந்தரராஜன், திருவேங்கடமுடையான், திருத்தங்கல் அப்பன் ஆகியோர், கருட வாகனங்களிலும், பெரியாழ்வார், சின்ன அன்ன வாகனத்திலும், ரத வீதிகளில் வலம் வந்தனர். கோலாட்டம், பஜனைகள் நடந்தன.