ஊஞ்சல் உற்சவம்
ADDED :4718 days ago
நெட்டப்பாக்கம்:நெட்டப்பாக்கம் அடுத்த செம்படபேட்டை அங்களாம்மன் கோவிலில், அமாவாசையையொட்டி, ஊஞ்சல் உற்சவம் நடந்தது.ஊஞ்சல் உற்சவத்தையொட்டி, காலை சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நெட்டப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.