உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர விழா

நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர விழா

திருநெல்வேலி:நெல்லையப்பர் கோயிலில் விஸ்வகர்மா சமுதாயத்தின் சார்பில் ஆடிப்பூர விழா நடந்தது. நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றிலிருந்து தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. கடந்த 3ம் தேதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடந்தது. 9ம் திருநாளான நேற்று விஸ்வகர்மா சமுதாயத்தின் சார்பில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடந்தன. இரவு அம்பாள் ரிஷப வானத்தில் வீதிஉலா நடந்தது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை விஸ்வகர்மா சமுதாய தலைவர் ஆறுமுகம், செயலாளர் குருமூர்த்தி மற்றும் சமுதாயத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !