உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வணங்கும் பக்தனுக்கு தன்னிகரில்லாத தன்மை தரும் பகமாலினி!

வணங்கும் பக்தனுக்கு தன்னிகரில்லாத தன்மை தரும் பகமாலினி!

பகமாலினி தேவிக்கு ஒளியைப் பரப்பும் சிவந்த திருமேனி, புன்முறுவல் பூத்த அழகிய திருமுகம், மூன்று கண்களும் ஆறு கரங்களும் உடையவள். இடது திருக்கரங்களில் செங்கழு நீர் மலர், பாசம், கரும்பு வில் ஆகியவற்றையும், வலக்கரங்களில் தாமரை மலர் அங்குசம், மலர்க்கணைகள் ஆகியவற்றையும் ஏந்தியவன். இவளைப் போலவே தோற்றமளிக்கும் சக்தி கணங்கள் சூழ பக்தர்களுக்கு அருள் செய்யும் வடிவினளாக இவள் வீற்றிருக்கிறாள். பகம் என்றால் ஐஸ்வர்யம் என்று பொருள். செல்வம், தர்மம், புகழ், ஸ்ரீ, ஞானம் என என்றும் மங்காத செல்வங்களை உடையவள். அந்த ஐஸ்வர்யங்களையெல்லாம் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு வாரி வழங்குபவளாக விளங்குவதால். இவள் பகமாலினி என்று அழைக்கப்படுகிறாள். பகம் என்றால் யோனி என்றொரு பொருளும் உண்டு. இந்த பகமெனும் தம்மையே பெண்மைக்கு உரியது. எனவே பெண்களுக்கு உரிய தெய்வமாகவும், அவர்களுக்குப் பலவிதமான நன்மைகளை அளிப்பவளாகவும் பகமாலினி விளங்குகிறாள். இவளை வழிபடுவதால் அனைத்து மக்களையும் தன் வசப்படுத்தும் சித்தி கிடைக்கும். மூவுலகும் அறியும் வண்ணம் பிரபலமான நிலை உண்டாகும். எந்த ஒரு காரியத்தைத் துவங்கினாலும் அதில் வெற்றி மட்டுமே கிடைக்கும். எதிரிகளை அழிக்கும் வழிமுறைகளையும், அவர்களை வெல்லும் வல்லமையையும் தன் பக்தனுக்குக் கொடுப்பதில் பகமாலினி வல்லவள். திருமணமான தம்பதிகளிடம் மகிழ்ச்சியை, அன்னியோன்யத்தை உருவாக்கி ஆனந்தம் கொடுப்பதும் பகமாலினி தேவிதான். பெண்களுக்கு உரிய தெய்வமாக விளங்கும் இவள், கர்ப்பிணிப் பெண்களுக்கு கண்கண்ட தெய்வமாகவும், அவர்களுக்கு சுகப்பிரசவமாகவும் அருளுகிறாள். குறைப்பிரசவம், கரு கலைந்து போகுதல் போன்ற குறைபாடுகள் இவளை வணங்குவதால் அறவே நீங்கும்.

லவுகீக வாழ்வில் இத்தனை நன்மைகளைக் கொடுக்கும் பகமாலினி, ஆன்மீக ரீதியாக தன் பக்தனுக்கு எல்லா தெய்வங்களையும் ப்ரீதி பண்ணும் தன்மையையும், அளப்பரிய சாதனைகளைச் செய்யும் வல்லமையையும் கொடுக்கிறாள். மிகப்பெரிய ஜபங்கள், ஹோமங்கள், பூஜைகள் ஆகியவற்றை பகமாலினியின் அருள் இருந்தால் அனாயாசமாகச் செய்து விடலாம். தனக்குத் தானே எதிரியாக விளங்கும் காமம், க்ரோதம், லோபம் போன்ற பகைவர்களை வெல்லுவதும் இவளது பக்தர்களுக்கு மிகச் சுலபமாகிறது. தன்னை வணங்கும் பக்தனுக்கு தன்னிகரில்லாத தன்மையை அருளி, எல்லா நிலையிலும் ஜயத்தைக் கொடுப்பவள் பகமாலினி. பகமாலினி நித்யாவுக்கான அர்ச்சனை:

ஓம் பகமாலின்யை நம
ஓம் பகாயை நம
ஓம் பாக்யாயை நம
ஓம் பகின்யை நம
ஓம் பகோதர்யை நம
ஓம் குஹ்யாயை நம
ஓம் தாக்ஷõயண்யை நம
ஓம் கன்யாயை நம
ஓம் தக்ஷயக்ஞ விநாசின்யை நம
ஓம் ஜயாயை நம
ஓம் விஜயாயை நம
ஓம் அஜிதாயை நம
ஓம் அபராஜிதாயை நம
ஓம் ஸுதீப்தாயை நம
ஓம் லேலிஹானாயை நம
ஓம் கராளாயை நம
ஓம் ஆகாச நிலயாயை நம
ஓம் ப்ராஹ்ம்யை நம
ஓம் பாலாயை நம
ஓம் ப்ரஹ்மசாரிண்யை நம
ஓம் ப்ரஹ்மாஸ்யாயை நம
ஓம் ஆஸ்யரதாயை நம
ஓம் ப்ரஹ்வ்யை நம
ஓம் ஸாவித்ர்யை நம
ஓம் ப்ரஹ்மபூஜிதாயை நம
ஓம் ப்ரஜ்ஞாயை நம
ஓம் மாத்ரே நம
ஓம் பராயை நம
ஓம் புத்தயே நம
ஓம் விச்வமாத்ரே நம
ஓம் சாச்வத்யை நம
ஓம் மைதர்யை நம
ஓம் காத்யாயன்யை நம
ஓம் துர்காயை நம
ஓம் துர்கஸந்தாரிண்யை நம
ஓம் பராயை நம
ஓம் மூலப்ரக்ருதயே நம
ஓம் ஈசானாயை நம
ஓம் ப்ரதானேச்வர்யை நம
ஓம் ஈச்வர்யை நம
ஓம் ஆப்யாயன்யை நம
ஓம் பாவன்யை நம
ஓம் மங்கலாயை நம
ஓம் யமாயை நம
ஓம் ஜ்யோதிஷ்மத்யை நம
ஓம் ஸம்ஹாரிண்யை நம
ஓம் ஸ்ருஷ்ட்யை நம
ஓம் ஸ்தித்யந்தகாரிண்யை நம
ஓம் அகோராயை நம
ஓம் கோர ரூபாயை நம

நம் மனதில் உள்ள ஒவ்வொரு காம்யத்தை (ஆசையை), பலனைப் பொறுத்து பகமாலினி தேவியை அதற்குரிய முறையில் உபதேசம் பெற்று ஆராதித்தால், அந்தந்த விசேஷமான பலன்கள் கிட்டும். உதாரணமாக, தாமரைப்பூ, கொன்றை, அரளி, அல்லி ஆகிய பூக்களை முறையே நான்கு வர்ணத்தவரும், அவரவர் வர்ணத்துக்கேற்ற பூவை, வாழைப்பழம், தேன், நெய் கலந்த த்ரிமதுரத்தில் தோய்த்து இவளுக்கு ஹோமம் செய்தால் அனைத்து காரியங்ளும் வசப்படும். வில்வ தளம், ஸமித், பழம் ஆகியவற்றால் ஹோமம் செய்தால் பரிபூர்ண லட்சுமி கடாட்சத்தை அடையலாம். வெண்தாமரையில் செய்யும் ஹோமம் வாகன ப்ராப்தியும் சிவந்த தாமரையால் செய்யும் ஹோமம் சர்வ சித்தியும் தரும்.

பகமாலினிக்கு உகந்தவை:
திதி: வளர்பிறை (சுக்லபக்ஷ) த்விதீயை, தேய்பிறை சதுர்த்தசி
புஷ்பம்: செந்தாமரை
நைவேத்யம்: சர்க்கரை (நாட்டுச் சர்க்கரை)

பகமாலின்யை வித்மஹே ஸர்வ வசங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்
என்பது இவளது காயத்ரி மந்த்ரம்

முறை யான உபதேசம் பெற்று; புரச்சரணம் செய்த பின்னர் இந்த ஹோமங்களைச் செய்தால் அனைத்து நன்மைகளையும் தங்கு தடையின்றிப் பெறலாம். பகமாலினி நித்யாவுக்கான பூதஜ: முதலில் ஸ்ரீ லலிதா தேவியை மகாநித்யாவாக தியானிக்க வேண்டும்.

யா பஞ்சதச்யாத்மக மந்த்ர ரூபா
பஞ்சோபசார ப்ரிய மானஸாம்பா
பஞ்சாக ஹர்த்ரீம் மஹதீம் சிவாம்தாம்
அ: கார ரூபாம் ப்ரணமாமி நித்யாம்

என்று கூறி லலிதா தேவியின் படத்துக்கோ யந்த்ரத்துக்கோ பூக்களைப் போடவும். பின்னர் சந்தனம், குங்குமம் பொட்டு இடவும், பின்னர் அன்றைய நித்யாவான பகமாலினி நித்யாவை, அவளது யந்த்ரத்தில் தியானிக்கவும்.

பகஸ்வரூபாம் பகினீமமோதாம்
ஸம்÷க்ஷõ பயந்தீமகிலாம்ச்ச ஸத்வான்
க்லின்னத்ரவாம் ஸ்ரீபகமாலினீம்தாம்
ஆகாரரூபாம் ப்ரணமாலி நித்யாம்

என்று கூறி பகமாலினி நித்யா தேவியின் படத்துக்கோ யந்த்ரத்துக்கோ பூக்களைப் போடவும். பின்னர் சந்தனம், குங்குமம் பொட்டு இடவும். மேற் கூறிய நாமாவளியால் பகமாலினி தேவிக்கு அவளுக்கு உகந்த செந்தாமைரப் பூக்களால் அர்ச்சனை செய்து, பின்னர் தூபம் தீபம் காட்டவும், தேவிக்கு உரிய நைவேத்யமான சர்க்கரையைச் சமர்ப்பிக்கவும். முடிந்தால் தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு நைவேத்யம் செய்ய வேண்டும். பின்னர் பகமாலினி தேவியின் காயத்ரியைக் கூறி கர்ப்பூர ஆரத்தி செய்து பூக்களைப் போட்டு பிரார்த்தனை செய்யவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !