சங்கடம் தீர்க்கும் சக்கரத்தாழ்வார்
ADDED :4410 days ago
மதுரை - ஒத்தக்கடையில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருமோகூர் அருள்மிகு காளமேகப் பெருமாள் ஆலயம். தாயாரின் திருநாமம் மோகனவல்லி. இங்கே, சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்புஅலங்காரத்துடன் பூஜைகள் நடைபெறும். இதில் கலந்துகொண்டு, நெய் விளக்கு ஏற்றி சக்கரத்தாழ்வாரை வழிபட்டு வர, வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம். அதேபோன்று பள்ளிகொண்ட பெருமாள், லட்சுமி நரசிம்மர் ஆகியோரையும் இங்கு தரிசிக்கலாம்.