வித்தியாசமான நைவேத்தியம்
ADDED :4551 days ago
மதுரைக்கு வடக்கே சுமார் 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அழகர் மலை. இங்கே கோயில் கொண்டிருக்கும் அழகர் மட்டுமல்ல, அவருக்கான நைவேத்தியமும் விசேஷமானதுதான். சுவாமிக்கு முக்கியப் பிரசாதமாக தோசை நைவேத்தியம் ஆகிறது. ஒரு படி அரிசி, அரை கிலோ உளுந்து, மிளகு மற்றும் சீரகம் ஆகியவற்றுடன், அரை லிட்டர் நெய் கலந்து, ஜம்பொன்னால் ஆன வாணலியில் வார்த்தெடுக்கப்படுமாம் இந்தத் தோசை!