மனிதநேயம் செழிக்க கஞ்சி கலச ஊர்வலம்
ADDED :4535 days ago
நாகர்கோவில்: மனிதநேயம் செழிக்கவும், மண்வளம், நீர்வளம் பெருகவும் வேண்டி, கிருஷ்ணன்கோயில் ஆதிபராசக்தி கோயிலில், 3501 கஞ்சி கலச ஊர்வலம் நடைபெற்றது. ஆடி பூரம் விழாவையொட்டி, பெண்கள் கலந்து கொள்ளும், கஞ்சி கலச ஊர்வலம், கிருஷ்ணன்கோயிலில் நடந்தது. அங்குள்ள திருமண மண்டபத்தில் இருந்து துவங்கிய ஊர்வலத்தை, நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ., முருகேசன் துவக்கி வைத்தார். தலையில் கஞ்சி கலசத்துடன்,"ஓம்சக்தி, பராசக்தி கோஷத்துடன் ஊர்வலம் வந்த பெண்கள் கோயிலை வந்தடைந்தனர்.அங்கு, பக்தர்கள் தேவிக்கு பாலாபிஷேகம் நடத்தினர். அதன்பின், ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகள், கோயில் நிர்வாகி சின்னதம்பி தலைமையில் செய்யப்பட்டிருந்தது.