முத்துமாரியம்மனுக்கு வளையல் அலங்காரம்
ADDED :4698 days ago
புதுச்சேரி:நல்லாண்ட முத்து மாரிம்மன் கோவிலில், வளையல் அங்கார நிகழ்ச்சி நேற்று நடந்தது.ஜவகர் நகர் நல்லாண்ட முத்து மாரியம்மன் கோவிலில், ஆடித்திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலை 5:00 மணிக்கு பொங்கலிடுதல் மற்றும் சுவாமிக்கு வளையல் அலங்கார நிகழ்ச்சி நடந்தது. அம்மனுக்கு வளையல் மாலை அணிவித்து சிறப்பு தரிதனம் செய்யப்பட்டது.நிகழ்ச்சியில் ஜவகர் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வளையல் வழங்கப்பட்டது.