முருங்கப்பாக்கத்தில் செடல் திருவிழா
ADDED :4536 days ago
புதுச்சேரி:சந்துவெளி மாரியம்மன் கோவில் செடல் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.முருங்கப்பாக்கம் சந்துவெளி மாரியம்மன் கோவில் 73ம் ஆண்டு செடல் திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 8ம்தேதி இரவு சுவாமி வீதியுலாவும், நேற்று முன்தினம் 12:00 மணிக்கு சாகை வார்த்தல், மாலை 4:00 மணிக்கு செடல் திரு விழாவும் நடந்தது. பக்தர்கள் செடல் போட்டுக் கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு இந்திர விமானத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.