உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோவில்களில் ஆடிச் சிறப்பு வழிபாடு

அம்மன் கோவில்களில் ஆடிச் சிறப்பு வழிபாடு

வேதாரண்யம்: வேதாரண்யத்திலுள்ள, தேரடி வேதமாகாளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிமுன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வழிபட்டனர். வேதாரண்யேஸ்வரர் கோவிலுள்ள துர்க்கை அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம், சிறப்பு ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம்காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ராகுகாலத்தில் நெய் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். ராமகிருஷ்ணாபுரம் நாக கன்னியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வேதாரண்யேஸ்வரர் கோவிலிருந்து பக்தர்கள் காவடி புறப்பட்டு, நாக கன்னியம்மன் கோவிலில் நிறைவடைந்தது. இதேபோல, கள்ளிமேடு பத்ரகாளியம்மன் கோவில், தோப்புத்துறை வனதுர்க்கை அம்மன் கோவில், வீரமாகாளியம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !