உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி மாரியம்மனுக்கு பால்குடம் எடுத்தல்

சக்தி மாரியம்மனுக்கு பால்குடம் எடுத்தல்

பெரம்பலூர்: பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரத்தில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜை முன்னிட்டு அம்மனுக்கு பால்குடம் எடுத்தல், மாவிளக்கு, கஞ்சி வார்த்தல், சிறப்பு பூஜையும், சக்தி விநாயகர், பாலமுருகன், வெங்கடேச பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் வெகு சிறப்பாக நடந்தது. நிகழ்ச்சியையொட்டி மதனகோபலபுரத்தில் உள்ள ஆதிபராசக்தி கோவிலிருந்து அம்மன் வீதி உலாவுடன் 125 பேர் பால்குடம் எடுத்து வந்தனர். இரவு சந்தனகாப்பு அலங்காரத்தில் திருவிதி உலாவந்து பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். இதில் திருச்சி இன்ஜினியர் கைலாசம் தலைமையில், அறங்காவலர் சக்தி முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. சிதம்பரம் அய்யர் சிறப்பு அபிஷேகத்தை நடத்தி வைத்தார். பால்குடம் எடுத்த பெண்களுக்கு இலவசமாக சேலை, ஜாக்கெட் மற்றும் ஆண்களுக்கு இலவச வேட்டி, துண்டுகள் வழங்கப்பட்டது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !