உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநிகோயிலில் குரங்குகளை பிடிக்க தேவஸ்தானம் முடிவு!

பழநிகோயிலில் குரங்குகளை பிடிக்க தேவஸ்தானம் முடிவு!

பழநிமலைக்கோயிலில் சுற்றித்திரியும் குரங்களை வனத்துறை உதவியுடன் பிடிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. பழநி மலைக்கோயிலின் வெளிப்பிரகாரம், "ரோப் கார், வின்ச் ஸ்டேஷன் பகுதிகளில் ஏராளமான குரங்குகள் உள்ளது. இவை பக்தர்களிடமிருந்து, பிரசாதப்பை, பணப்பை, தேங்காய், பஞ்சாமிர்தம், பழங்கள் உட்பட, அவர்கள் கையில் வைத்துள்ள எதுவாக இருந்தாலும், பறித்து செல்கிறது. இதனால் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். வனப்பகுதியில் போதிய தண்ணீர் வசதியில்லாததால், மலைக்கோயிலில் குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்து, அவற்றின் தொந்தரவும் அதிகரித்துள்ளதால்,குரங்குகளை வனத்துறையினர் உதவியுடன், அதற்காக மரக் கூண்டுகள் மூலம் பிடிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்காக மாவட்ட வனத்துறையினருக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது.இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம் கூறுகையில்,"" மலைக்கோயிலில் குரங்குகளின் தொந்தரவு உள்ளது. அவற்றை செக்யூரிட்டிகள் விரட்டி வருகின்றனர். வனத்துறையினர் தேதிக்காக காத்திருக்கிறோம். அதன்பின் குரங்குகளை பிடித்து, வனப்பகுதியில் விடப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !