உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரியனுக்கும் பாதுகை

சூரியனுக்கும் பாதுகை

பீகாரில், கயாவில் உள்ள தட்சிணார்க்க மந்திர் எனும் சூரியனுக்கான கோயிலில் உள்ள ஆதித்யன் வித்தியாசமான ஆடை அமைப்புடன், இடுப்பில் பெல்ட்டும், காலில் நீளமான பூட்ஸ் போன்ற காலணியும் அணிந்து இக்கோயிலில் காட்சிதருகிறார், சூரியன். இக்கோயில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. வாரங்கல் இளவரசர் இதனைப் புதுப்பித்தார் என்ற குறிப்புகள் இங்கு காணப்படுகின்றன. இன்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ஆலயத்திற்கு பக்தர்கள் கூட்டமாக வருகின்றனர். இத்தலத்தில் முன்னோர்களுக்கு நீர்க்கடன் செலுத்துவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !