உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாளை., முனீஸ்வரர் சங்கிலிபூதத்தார் கோயிலில் இன்று கொடை விழா

பாளை., முனீஸ்வரர் சங்கிலிபூதத்தார் கோயிலில் இன்று கொடை விழா

திருநெல்வேலி:பாளை., முனீஸ்வரர், சங்கிலிபூதத்தார் கோயில் கொடை விழா இன்று(16ம் தேதி) நடக்கிறது. பாளை., பெருமாள் சன்னதி தெருவில் உள்ள முனீஸ்வரர், சங்கிலிபூதத்தார், பேச்சியம்மன் கோயில் கொடை விழா நேற்று (15ம் தேதி) மாலை தாமிரபரணியிலிருந்து புனித தீர்த்தம் எடுக்கும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. பின் முனீஸ்வரர், சங்கிலிபூதத்தார் மற்றும் பேச்சியம்மனுக்கு அபிஷேகமும், இரவு 9 மணிக்கு மாகாப்பு அலங்கார பூஜை நடந்தது. முன்னதாக இரவு 7 மணி முதல் ஆன்மிக நிகழ்ச்சி, சாக்ஸபோன் இசைக்கச்சேரி, நாதலயம் பக்தி இன்னிசை போன்றவை நடந்தன. இன்று(16ம் தேதி) காலை 8 மணிக்கு பால் குடம் எடுத்தல், 11 மணிக்கு மெல்லிசை கலந்த வில்லிசை நிகழ்ச்சி, 12 மணிக்கு மதிய கொடை, மாலை 5 மணிக்கு பொங்கலிடும் வைபவம் போன்றவை நடக்கிறது. இரவு 9 மணிக்கு சந்தனக்காப்பு அலங்கார பூஜை, 12 மணிக்கு சாமக்கொடை நடக்கிறது. ஏற்பாடுகளை பாளை., முனீஸ்வரர், சங்கிலி பூதத்தார் கோயில் தலைவர் அய்யனார், செயலாளர் பிச்சையா, பொருளாளர் குமரேசன், உப தலைவர் சங்கரதாஸ், உதவி செயலாளர் ஆறுமுகம் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !