உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமி விவேகானந்தர் ரதயாத்திரை இன்று நெல்லை வருகை

சுவாமி விவேகானந்தர் ரதயாத்திரை இன்று நெல்லை வருகை

திருநெல்வேலி:நெல்லைக்கு இன்று(16ம் தேதி) வருகைதரும் சுவாமி விவேகானந்தர் ரத யாத்திரைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.  சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த ஆண்டு விழாவை முன்னிட்டு விவேகானந்தர் ரதயாத்திரை தமிழகம் முழுவதும் சுமார் 13 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த ரதயாத்திரை இன்று(16ம் தேதி) நெல்லை வருகிறது. காலை 9.30 மணிக்கு இந்தியா சிமென்ட் முன் ரதயாத்திரைக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து சங்கர்நகர் ஜெயேந்திரா பள்ளி, பாளை.,சின்மயா மெட்ரிக் பள்ளி, பாளை.,காந்தியம்மாள் மேல்நிலைப்பள்ளி, தியாகராஜநகர் புஷ்பலதா பள்ளி, மகாராஜநகர் ஜெயேந்திரா பள்ளி, நெல்லை ஜங்ஷன் ம.தி.தா.,இந்துமேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களுக்கு விவேகானந்தர் ரதயாத்திரை செல்கிறது. நாளை(17ம் தேதி) தச்சநல்லூர் வேதிக் வித்யாஷ்ரம், பிரான்சேரி பி.எஸ்.என்.,இன்ஜி.,கல்லூரிக்கும், மாலை 4 மணிக்கு சித்தா கல்லூரி முன் இருந்து ஊர்வலம் துவங்குகிறது. அரவிந்த் கண் ஆஸ்பத்திரி டாக்டர் ராமகிருஷ்ணன் ஊர்வலத்தை துவக்கி வைக்கிறார். வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமத்தின் தலைவர் சைதன்யானந்தாஜி, சென்னை தர்ம ரட்ஷண ஜெகன்நாதன் சிறப்புரையாற்றுகின்றனர். 18ம் தேதி, காலை 9 மணிக்கு அரியகுளம் சாரதா கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு, அமைச்சர் செந்தூர் பாண்டியன் தலைமை வகிக்கிறார். பேட்டை செக்கடி, நெல்லை டவுன் பகுதிகளுக்கு ரதம் செல்கிறது. அனைத்து வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் புஷ்பாஞ்சலி, ஆரத்தி நடக்கிறது. ஏற்பாடுகளை சாரதா கல்லூரி சுவாமி சங்கரானந்தா மகராஜ் மற்றும் வரவேற்பு குழுவினர் செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !