தண்ணீருக்குள் அருளும் ஜலதுர்கை!
ADDED :4479 days ago
சென்னை மேற்கு முகப்பேர் அருகில் உள்ள கனக துர்கா ஆலயத்தில், சுமார் 13 அடி உயரமுள்ள நீர்த் தொட்டியில் காட்சி தருகிறாள் ஜலதுர்கை அம்மன். வருடம்தோறும் சித்ரா பவுர்ணமி தினத்தில் மட்டும், மகாமண்டபத்துக்கு எழுந்தருள்கிறாள் ஜலதுர்கை. அன்று அந்த மண்டபமே நிறையும் அளவுக்குப் பிரசாதங்கள் படைத்து, இந்த அம்மனை வழிபடுகிறார்கள்!