சித்தானந்தா சுவாமி கோவிலில் இன்று ஆவணி அவிட்டம்
புதுச்சேரி: கருவடிக்குப்பம் சித்தானந்தா சுவாமி கோவிலில், இன்று (20ம் தேதி) ரிக், யஜூர் வேதத்தை சேர்ந்தவர்களுக்கு ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இன்று (20ம் தேதி) காலை 5:00 மணி முதல் 12:00வரை, 1மணி நேரத்திற்கு ஒவ்வொரு பிரிவாக பூணுல் மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 21ம் தேதி காலை 5:00 மணி முதல் 7:00 வரை காயத்ரி ஜெபம் நடக்கிறது.ரிக், யஜூர் வேதத்தை சேர்ந்தவர்கள் சித்தானந்தா சுவாமி கோவிலில் நடக்கும் ஆவணி அவிட்டத்தில் கலந்து கொள்ளலாம். மேலும், இதுதொடர்பான தகவலுக்கு 98423 29770, 98423 27791 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை வேதசாம்ராட் ராஜா சாஸ்திரிகள் தெரிவித்துள்ளார். வேதபுரீஸ்வரர் கோவில்வேதபுரீஸ்வரர் கோவிலில், ரிக், யஜூர் வேதத்தை சேர்ந்தவர்களுக்கு இன்று ஆவணி அவிட்டம் நடக்கிறது. காலை 7:45 மணிக்கு வெங்கட்டா நகர் விஜயகணபதி கோவிலிலும், 8:45 மணிக்கு புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஐயனார் நகர் கோகிலாம்பிகா சமேத கல்யாண சுந்தரர் கோவிலும், 10:45 மணிக்கு, காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலும் ஆவணி அவிட்டம் நடக்கிறது. அதையொட்டி கீதாராம சாஸ்திரிகள் தலைமையில் பூணூல் மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மறுநாள், மொரட்டாண்டி நவக்கிரக கோவிலில் காயத்திரி ஜெபம் நடக்கிறது.இத்தகவலை கீதாராம சாஸ்திரிகள் தெரிவித்துள்ளார்.