உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவிலில்கூழ் வார்த்தல் திருவிழா

முத்துமாரியம்மன் கோவிலில்கூழ் வார்த்தல் திருவிழா

திருப்போரூர்: திருப்போரூர் முத்துமாரியம்மன் கோவிலில், கூழ் வார்த்தல் திருவிழா சிறப்பாக நடந்தது.திருப்போரூர், கிரிவல பாதையில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கூழ்வார்த்தல் திருவிழா, நேற்று முன்தினம் நடந்தது. காலை 10:00 மணிக்கு, சரவண பொய்கையில் இருந்து, கங்கை நீர் கொண்டு வந்து, அபிஷேகம் செய்தனர். பக்தர்கள், அலகு குத்தி, கரகத்துடன் ஊர்வலம் வந்தனர். மதியம் 2:00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை 4:00 மணிக்கு, ஊரணி பொங்கல் வைத்தலும் நடந்தது. இரவு 7:00 மணிக்கு, அம்மன் வீதிஉலா வைபவமும், இரவு 11:00 மணிக்கு, கும்பம் படைத்தலும் நடந்தது. பொதுமக்கள், வீடுகள் தோறும் அம்மனுக்கு அர்ச்சனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !