பெசன்ட் நகர் மாதா கோவில் திருவிழாவிற்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள்!
ADDED :4461 days ago
சென்னை: பெசன்ட் நகர், வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவிற்கு, சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில், கூடுதலாக, 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.சென்னை, பெசன்ட் நகர், அன்னை வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா வரும், 29ம் தேதி துவங்கி, செப்., 8ம் தேதி வரை நடக்கிறது. விழாவிற்கு, சென்னை மாநகர் போக்குவரத்து கழகம், 50 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டு உள்ளது.