உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓம் சக்தி கோயில் மழை வேண்டி சிறப்பு யாகம்

ஓம் சக்தி கோயில் மழை வேண்டி சிறப்பு யாகம்

வத்தலக்குண்டு ஓம் சக்தி கோயில் மழை வேண்டி ஊர்வலம், யாகம் நடந்தது. ஊர்வலத்திற்கு முதல் வார்டு கவுன்சிலர் நாகூர் கனி தலைமை வகித்தார். அ.தி.மு.க.,நகர செயலாளர் பீர்முகம்மது துவக்கி வைத்தார். இரண்டாம் நாள் யாகத்திற்கு அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் சுசித்ரா முன்னிலை வகித்தார். சிறுபான்மை அணி ஒன்றிய செயலாளர் ஜான், இணை செயலாளர் நல்லமுகம்மது, சேவுகம்பட்டி நகர செயலாளர் மாசாணம், கூட்டுறவு நகர வங்கி தலைவர் ஜெயப்பிரகாசம், துணை தலைவர் வெங்கடேசன், ஓம்சக்தி கோயில் வழிபாட்டு மன்றத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !