பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :4539 days ago
விழுப்புரம்: விழுப்புரம் பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது.விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் பசுபதீஸ்வரர் கோவிலில் வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.இதனையொட்டி பசுபதீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள், நந்தீகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மகாதீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.