முருகன் கோயிலில் ராமர் சிற்பம்
ADDED :4471 days ago
சீதையை இலங்கைக்குத் தூக்கிச் சென்றபோது கழுகு அரசன்ஜடாயு ராவணனைத் தடுத்தது. ராவணன் அதன் இறகை வெட்டி வீழ்த்தினான். இந்த தகவலை ராமனிடம் தெரிவித்த ஜடாயு இறந்து விட்டது. ராமன், ஜடாயுவைத் தன் தந்தையாக கருதி ஈமக்கிரியைகளைச் செய்தார். பெற்ற தந்தை தசரதருக்கு கூட, இந்த பாக்கியம் ராமன் மூலம் கிடைக்கவில்லை. ஜடாயுவிற்கு அந்திமக்கிரியை செய்யவேண்டிய பொறுப்பில் இருந்தவர் சம்பாதி என்னும் கழுகு முனிவர். இவர், தன் கடமையைச் செய்யாததற்கு மனம் வருந்தி, ராமனிடம் மன்னிப்பு வேண்டினார். அந்தப் பாவம் தீர, முருகனை வணங்கும்படி ராமர் அவருக்கு வழிகாட்டினர். உடனே சம்பாதி முனிவர் கழுகுமலைக்கு பறந்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து 30 கி.மீ., தூரத்திலுள்ளது. இக்கோயில் ராமாயண தொடர்புடையது. தூண்களில் ராம, ஆஞ்சநேயர் சிற்பங்கள் செதுக்கப் பட்டுள்ளன.