ராகுகாலம், எமகண்டம் நேரத்தில் வெளியூர் செல்ல நேர்ந்தால் என்ன செய்வது?
ADDED :4463 days ago
அரசாணை, உடல்நிலைக் கோளாறு போன்ற விஷயங்களில் மேற்படி விஷயங்களைப் பின்பற்ற இயலாது. இதைத்தான் நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை என்பர். பஸ், ரயில், விமானம் போன்றவை ராகுகாலம், எமகண்டத்திற்காக காத்திருப்பது இல்லை. இது போன்ற சமயங்களில் நாம் பரஸ்தானம் என்ற ஒன்றைச் செய்து கொள்ளலாம். அதாவது ராகுகாலம், எமகண்டம் துவங்குவதற்கு முன்பே பயணப்பைகளுடன் வேறு இடத்திற்குச் சென்று விட வேண்டும். அப்படி கிளம்ப முடியாத பட்சத்தில், விநாயகருக்குச் சிதறுகாய் போட்டுப் புறப்படலாம்.