கொள்ளார் கிராமத்தில் கும்பாபிஷேக விழா
ADDED :4447 days ago
திண்டிவனம்:திண்டிவனம் அடுத்த கொள்ளார் கிராமத்தில் அம்மச்சார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.விழாவையொட்டி கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, வாஸ்து பூஜை, கோபூஜை, மூலிகை பூஜை, பிரவேசபலி, தன பூஜை மற்றும் முதல் கால யாக பிரவேச பூஜைகள் நடந்தன. காலை 8.30 மணிக்கு நாகராஜ சுவாமிகள் மூல கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். மூலவர் அம்மச்சார் அம்மனுக்கு அபிஷேக தீபாராதனை செய்தனர். பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.