உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மர­வள்ளி கிழங்கு மாவில் விநா­யகர் சிலைகள்!

மர­வள்ளி கிழங்கு மாவில் விநா­யகர் சிலைகள்!

விநா­யகர் சதுர்த்தி கோலா­கலம் துவங்கி விட்­டது. நாடு முழு­வதும், விநா­யகர் சிலைகள் தயா­ரிப்பு முடிந்து, விற்­ப­னையும் துவங்­கி­யுள்­ளது. அதே­நேரம், இயற்­கைக்கு இசைந்த முறையில், சிலைகள் தயா­ரிக்க வேண்டும் என, சுற்­றுச்­சூழல் துறை கோரிக்கை விடுத்­துள்­ளது. அதை வலி­யு­றுத்தும் வகையில், கிழக்கு கடற்­கரை சாலையில் உள்ள வெண்­ணாங்­கு­பட்டில், விநா­யகர் சதுர்த்­தியை முன்­னிட்டு, ரசா­யன பொருட்­க­ளின்றி, இயற்கை முறையில், விநா­யகர் சிலைகள் தயா­ரிக்கும் பணி மும்­மு­ர­மாக நடை­பெற்று வரு­கி­றது. சுற்­றுச்­சூ­ழலை பாதிக்­காத, நீரில் எளிதில் கரைய கூடிய இந்த சிலைகள், பொது­மக்­க­ளி­டையே வர­வேற்பை பெற்­றுள்­ளன. சிலை தயா­ரிக்கும் பணியில் ஈடு­பட்­டுள்ள பழ­னி­வேலு கூறி­ய­தா­வது: தமி­ழ­கத்தில், கடந்த சில ஆண்­டு­க­ளாக, பெரிய விநா­யகர் சிலை­களை வைத்து வழி­ப­டுவோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்ளதால், 5 அடி முதல் 12 அடி உயரம் வரை உள்ள பெரிய சிலை­களை செய்து வரு­கிறோம். எளிதில் தண்­ணீரில் கரைய கூடிய பேப்பர் தூள், மர­வள்ளி கிழங்கு மாவு ஆகி­ய­வற்றின் மூலம் இந்த சிலை­களை செய்து, ‘வாட்டர் கலர்’ கொடுக்­கிறோம். 5 அடி உயரம் உள்ள சிலை, 4,500 முதல் 5,000 ரூபாய் வரை­யிலும், 12 அடி உயரம் உள்ள சிலைகள், 15 ஆயிரம் முதல் 16 ஆயிரம் ரூபாய் வரை­யிலும் விற்­கிறோம். ரசா­யன பொருட்கள் இன்றி, முற்­றிலும் இயற்கை முறையில் தயா­ரிக்­கப்­ப­டு­வதால், திருப்­பதி, பெங்­க­ளூரு, வேலூர், காஞ்சிபுரம் போன்ற நக­ரங்­க­ளி­லி­ருந்தும், பக்­கத்து கிரா­மங்­க­ளி­ல் இருந்தும் ஏராள­மானோர் வந்து, சிலை­களை வாங்கி செல்­கின்­றனர். கடந்த ஆண்டை விட இந்­தாண்டு கூடுதல் விற்­ப­னை­யாகும் என, எதிர்பார்க்­கிறோம். இவ்­வாறு, அவர் தெரி­வித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !