உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்­தைகள் கொண்­டா­டிய ஆடி திரு­விழா விளை­யாட்டு!

குழந்­தைகள் கொண்­டா­டிய ஆடி திரு­விழா விளை­யாட்டு!

சென்னை: சென்னை ராஜாஜி சாலை அருகில் உள்ள பூங்­காவில், குழந்­தைகள் சிலர், ஆடி மாத திரு­வி­ழாவை கொண்­டாடினர். சென்னை, ராஜாஜி சாலை அருகில் உள்ள சத்யா நகர் பூங்­காவில் நேற்று காலை 10 முதல் 15 குழந்­தைகள் வரை ஒன்று கூடினர். கரகம் ஒன்றை தயார் செய்து, அதன் உச்­சியில், விநா­யகர் சிலையை வைத்து அலங்­க­ரித்­தனர். அதை ஒரு சிறுவன் தலையில் தூக்கி வைத்து கொண்டான். ஒரு சிறுவன், பெயின்ட், டின் னை மேள­மாக மாற்­றினான். மற்ற சிறு­வர்கள் உட­ன­டி­யாக பக்­தர்­க­ளா­னார்கள். ஊர்­வ­லத்தின் முன்­ன­ணியில், அலகு குத்தி தேரி­ழுப்­பதை நினை­வு­ப­டுத்தும் விதத்தில், ஒரு சிறுவன் தனது இடுப்பில் கயிற்றை கட்டி, அதன் மறு­மு­னையை ஒரு சைக்­கிளில் கட்டி கொண்டான். சைக்­கிளில் மற்­றொரு சிறுவன் ஏறி அமர்ந்து ஓட்ட, கயிற்றை கட்டி கொண்ட சிறுவன், தான் அலகு குத்தி தேரி­ழுப்­ப­தாக பாவனை செய்தான். விளை­யாட்டின் இறு­தியில், தீமி­தியும் நடந்­தது. அது உண்­மை­யான தீமி­தி­யா­கவும் இருந்­தது. சூடான அடுப்புக் கரி­களை கொட்டி பரப்பி, அதன் மீது சிறு­வர்கள் தீ மிதித்து, தங்கள் பிரார்த்­தனை விளை­யாட்டை நிறைவு செய்­தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !