வரதராஜப்பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்சவ திருத்தேரோட்டம்!
ADDED :4544 days ago
பாலசமுத்திரம்: பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயிலில், ஆவணி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டுதிருத்தேரோட்டம் நடந்தது. ஆவணிபிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து நடந்துவருகிறது. சப்பரம், பவளக்கால் சப்பரம், அனுமார்,கருடன், அன்னம் போன்ற வாகனத்தில், வரதராஜப்பெருமாள், பூதேவி,ஸ்ரீதேவியுடன் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தி இன்னிசை,சொற்பொழிவு, கருத்தரங்கு போன்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் காலை 7.30 மணிக்கு நடந்தது. முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சனைகள் நடந்தது. வரதராஜப்பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் திருத்தேரில் வீதிஉலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை விøடாற்ற்றி உற்சம் நடக்கிறது.