உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லூர் விஸ்வேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவு

நல்லூர் விஸ்வேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவு

திருப்பூர்: நல்லூர், விஸ்வேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நிறைவு நாள் தீர்த்தவாரி நடந்தது.


நல்லுார் ஸ்ரீவிசாலாட்சியம்மன் உடனமர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஆனி தேர்த்திருவிழா, கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மனோன்மணி அம்மன் சமேத ஸ்ரீசந்திரசேகரர் பல்லக்கில் திருவீதியுலா மற்றும் சோமாஸ்கந்தர் அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்று வந்தது. 29ம் தேதி காலை, விநாயகர் மற்றும் சோமாஸ்கந்தர் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை தேரோட்டமும் நடைபெற்றது. சிறப்பாக நடைபெற்று வந்த தேர்த்திருவிழா இன்று காலை தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் சோமாஸ் கந்தர் பத்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !