கோவிலில் மணியடித்து சாமியை வழிபட்ட காட்டு யானை!; மக்கள் வியப்பு
ADDED :43 minutes ago
கூடலூர்: கூடலூர் அருகே, காட்டு யானை கோவில் அருகே, மணியின் கயிற்றை இழுத்து, தும்பிக்கையை தூக்கி சாமியை வணங்குவது போன்ற செயல் மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் குடியிருப்புக்குள் நுழையும் காட்டு யானைகள், விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்துவதுடன், மக்களை தாக்குவதால் மக்கள் காட்டு யானைகளை எப்போதும் அச்சத்துடைய பார்த்து வருகின்றனர். இந்தநிலையில், ஓவேலி மூலக்காடு கிராமத்தில், நுழைந்த காட்டு யானை, அங்குள்ள ஆற்றைக் கடந்து, கோவில் அருகே சென்று, தும்பிக்கையில் கோவில் மணியில் கட்டப்பட்ட கயிற்றை இழுத்து, சுவாமியை வணங்குவது போன்ற செயலை அப்பகுதியினர் பார்த்து வியப்படைந்தனர். இது தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.