உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அச்சிறுபாக்கம் அம்மன் கோவில்களில் தீ மிதி திருவிழா விமரிசை

அச்சிறுபாக்கம் அம்மன் கோவில்களில் தீ மிதி திருவிழா விமரிசை

அச்சிறுபாக்கம்; கரசங்கால் கிராமத்தில் உள்ள எட்டியம்மன் மற்றும் தான்தோன்றி அம்மன் கோவிலகளில் இன்று தீ மிதி திருவிழா விமரிசையாக நடந்தது.


செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அருகே கரசங்கால் கிராமத்தில் பழமையான எட்டியம்மன் மற்றும் தான்தோன்றி அம்மன் கோவில்கள் உள்ளன. இங்குஆண்டு தோறும் ஆனி மாதத்தில் கூழ்வார்த்தல் மற்றும் தீ மிதி திருவிழா விமரிசையாக நடப்பது வழக்கம். அதன் படி, இந்தாண்டு ஆனிமாத விழா கடந்த 28ம் தேதி நந்தவனத்தில் இருந்து, அம்மன் அழைப்பு நடந்தது. பின், காப்பு கட்டுதல் நிகழ்வு நடந்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த 30ம் தேதி கூழ்வார்த்தல் விழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக தீ மிதி திருவிழா விமரிசையாக நடந்தது. இதில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எட்டியம்மன் மற்றும் தான்தோன்றியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தனர். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !